
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ள சாராயம் குடித்த ஐந்து பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி கவலை அளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடியா திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் ஓடுவதை தொடர்ச்சியாக நான் சுட்டிக்காட்டி வந்தும் இதனால் ஏற்கனவே பல உயிரிழப்புகள் ஏற்பட்ட போதும் கூட கள்ள சாராயத்தை ஒழிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.
கள்ளச்சாராயம் இல்லை அது மெத்தனால் என்று சொன்னது போல மக்கள் வாழ்க்கை விஷயத்தில் வார்த்தை விளையாட்டு விளையாடாமல் கள்ளச்சாராயத்திற்கு எந்த பெயர் இருந்தாலும் அதனை உடனடியாக ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகின்றேன் என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.