
மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரில், broad daylight-இல் நடந்த கொலை முயற்சி சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த மார்ச் 21 அன்று, ஜான்சி ரோடு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் இந்த சம்பவம் நிகழ்ந்தது. அனில் பால் என்பவர், தனது மனைவி ராஜ்னி பால் மற்றும் அவளது காதலர் மங்கள்சிங் குஷ்வா ஆகியோர் திட்டமிட்டு தன்னை கார் மூலம் அடித்து 50 மீட்டர் வரை இழுத்துச் சென்றதாக புகார் அளித்துள்ளார். முதலில் இது சாதாரண விபத்தாக தெரிந்த நிலையில் பின்னர் சிசிடிவி வீடியோ வெளியானதும் கொலை முயற்சி என்பது உறுதியானது.
இந்த சம்பவத்தின் போது படுகாயமடைந்த அனில் பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். அதன்பின், தனது மனைவியும் அவளது காதலரும் தன்னை திட்டமிட்டு கொலை செய்ய முயற்சித்தனர் என்று கூறி போலீசில் புகார் அளித்தார். மேலும், சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளையும் போலீசாரிடம் வழங்கி, இருவரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இந்தக் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி, மக்கள் அதிர்ச்சி மற்றும் கோபம் தெரிவித்தனர்.
#बॉयफ्रेंड के साथ मिलकर #पति को #कार से #कुचलने की कोशिश: CCTV में कैद घटना
ग्वालियर : ग्वालियर में बॉयफ्रेंड की मदद से पत्नी द्वारा पति को कुचलकर मारने का मामला सीसीटीवी फुटेज के जरिए सामने आया है। इसमें पति बच गया।
झांसी रोड थाना क्षेत्र के तारागंज निवासी सुनील पाल ने पुलिस… pic.twitter.com/Mn3e1hwJ0D— 🇮🇳Jitendra pratap singh🇮🇳 (@jpsin1) March 27, 2025
அனில் மற்றும் ராஜ்னி பால் இருவரும் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட தம்பதிகள். இவர்கள் இருவருக்கும் மூன்று குழந்தைகள் – இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். ஆரம்பத்தில் எல்லாம் சாதாரணமாக இருந்த நிலையில், ராஜ்னி அடிக்கடி தாய்வீட்டுக்குச் செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேற ஆரம்பித்தார். இதனால் சந்தேகமடைந்த அனில், தன் மனைவியை பின்தொடரவே அவர் தன் தாய் வீட்டின் பக்கத்து வீட்டில் வசிக்கும் மங்கள் சிங் என்பவரை காதலித்து வந்ததை அறிந்தார். இதனால் அவர் தன் மனைவியை கண்டித்துள்ளார்.
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும் அனில் அளித்த புகாரையும், வீடியோ ஆதாரத்தையும் வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி காட்சிகளின் மூலம் இது திட்டமிட்ட கொலை முயற்சி என உறுதி செய்யப்பட்டு, ஒரு மாத தேடலுக்குப் பிறகு ராஜ்னி பாலும் மங்கள்சிங் குஷ்வாவும் தற்போது கைது செய்யப்பட்டனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் உள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.