
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிப்காட் பகுதியில் சக்திவேல்-சுதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் ஒரு செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு 3 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. அப்போது அதை நடத்தி வந்த பூவரசன் என்பவருடன் சுதாவுக்கு தகாத முறையில் உறவு ஏற்பட்டது. இதனால் சக்திவேல் தன்னுடைய மனைவியை கண்டித்துள்ளார்.
இதனால் சுதா அவரை விட்டு கோபத்தில் பிரிந்து சென்று விட்டார். இதனால் சக்திவேல் 2-ம் திருமணம் செய்வதற்கு முடிவு செய்துள்ளார். ஆனால் குழந்தையை காரணம் காட்டி அவருக்கு பெண் தர மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரத்தில் இருந்த சக்திவேல் தன் குழந்தையை தரையில் அடித்து தூக்கி வீசியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.