
கடலூர் மாவட்டத்தில் மாணவிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் பல வருடங்களாக தலைமறைவாக இருந்த தம்பதியை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். அதாவது கடந்த 2014 ஆம் ஆண்டு திட்டக்குடி பகுதியில் உள்ள ஒரு அரசு பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இதே பள்ளியில் 13 வயது சிறுமி ஒருவர் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்த இரண்டு சிறுமிகளும் தோழிகளாக இருந்த நிலையில் இதில் 13 வயது சிறுமிக்கு பெற்றோர் இல்லாததால் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்தார். இந்த 13 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு இட்லி கடைக்கு பலகாரம் வாங்க சென்றார். அப்போது அந்த கடையின் உரிமையாளர் செந்தில் குமார் என்பவரது மனைவி தனலட்சுமி தன்னுடைய கள்ளக்காதலனான ஆனந்தராஜ் என்பவருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
இதனை அந்த சிறுமி பார்த்து விட்டார். இதன் காரணமாக தனலட்சுமி அந்த சிறுமி வெளியே சொல்ல கூடாது என்பதற்காக தன் வீட்டுக்கு அவரை கட்டாயப்படுத்தி அழைத்து சென்று தன் கள்ள காதலனுடன் உல்லாசமாக இருக்க வைத்துள்ளார். இதேபோன்று அந்த சிறுமியின் தோழியான 13 வயது மாணவியையும் மிரட்டி ஆனந்தராஜுடன் உல்லாசமாக இருக்க வைத்தார். இதைத் தொடர்ந்து அந்த இரு சிறுமிகளையும் பாலியல் புரோக்கர் கலா என்பவரது வீட்டிற்கு அழைத்து சென்று விபச்சாரத்தில் தனலட்சுமி ஈடுபடுத்தினார்.
அந்த சிறுமிகளை செல்வராஜ் என்பவருடன் கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருக்க வைத்துள்ளார். பின்னர் மதபோதகர் அருள்தாஸ் என்பவரது வீட்டிற்கு சிறுமிகளை 2 நாட்கள் தனலட்சுமி அனுப்பி வைத்தார். இதில் 13 வயது சிறுமியுடன் அவர் உல்லாசமாக இருந்த நிலையில் பின்னர் பல்வேறு இடங்களுக்கு சிறுமிகளை அழைத்துச் சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்தினர். கடைசியாக சதீஷ்குமார் (39) தமிழரசி ஆகியோரிடம் மாணவிகளை விற்பனை செய்து விட்டனர். அவர்கள் இருவரும் வாடகை வீட்டில் மாணவிகளை தங்க வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தனர். அப்போது மாணவிகள் இருவரும் அவர்களிடமிருந்து தப்பி திட்டக்குடி காவல் நிலையத்தில் நடந்த விவரங்களை கூறிய நிலையில் பின்னர் அது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கிட்டத்தட்ட 19 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் 16 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தமிழரசி மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது அவர்களை சிபிசிஐடி போலீசார் பிடித்துள்ளனர். மேலும் விபச்சார வழக்கில் கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு பிறகு தற்போது தம்பதியை போலீசார் கைது செய்த நிலையில் அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெறுகிறது.