
கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் அனாமேரி (21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் சக நண்பரான அப்பெக்கர் (21) என்பவருடன் ஒன்றாக பைக்கில் சென்றுள்ளார். இவர்கள் நாகராம்புரா வனப்பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு மரத்தின் கிளை திடீரென முறிந்து அவர்கள் பைக்கின் மீது விழுந்தது. இதில் நிலை தடுமாறி அவர்கள் கீழே விழுந்த நிலையில் அவர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. அவர்களை அக்கம் பக்கம் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்த நிலையில் மாணவி உயிரிழந்து விட்டார். அங்கு மாணவனுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.