
கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிவப்பிரகாசம் (45) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வரும் நிலையில் அந்த கல்லூரியில் படித்த 25 வயது இளம் பெண் ஒருவர் தான் படித்த சான்றிதழ்களை பெறுவதற்காக சிவப்பிரகாசம் உதவியை நாடியுள்ளார். அதாவது திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் கோவையில் கல்லூரி படிப்பை முடித்த நிலையில் எம்எஸ்சி பட்டதாரியான அவருக்கு வங்கியில் வேலை கிடைத்தது. இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வேலை பார்க்கும் நிலையில் அந்த வங்கி கேட்டதன் அடிப்படையில் சான்றிதழ்கள் அனைத்தையும் வழங்கிய நிலையில் பின்னர் வேலையை விட்டு நின்றுவிட்டார்.
அந்தப் பெண் வேலையை விட்டு நின்ற நிலையில் சான்றிதழ்களை வங்கி நிர்வாகம் கொடுக்க மறுத்துள்ளது. இதனால் தான் கல்லூரியில் படிக்கும்போது தனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் சிவப்பிரகாசம் உதவியை இளம் பெண் நாடினார். பின்னர் கடத்த சில நாட்களுக்கு முன்பாக சிவப்பிரகாசம் இளம் பெண்ணுக்கு தொடர்பு கொண்டு கோவைக்கு வந்தால் சான்றிதழ்களை வாங்கி தருவதோடு வேறொரு நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய அந்த இளம் பெண் நேற்று சிவப்பிரகாசம் வீட்டிற்கு சென்றார். அங்கு சிறிது நேரம் அவர்கள் பேசிக் கொண்டிருந்த நிலையில் திடீரென சிவப்பிரகாசம் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார்.
அந்தப் பெண் எப்படியோ தப்பி வீட்டில் குளியல் அறையில் நுழைந்த நிலையில் தன் தோழி ஒருவருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நடந்து சம்பவத்தை தெரியப்படுத்தினார். பின்னர் தான் இருக்கும் இடத்தில் லொகேஷனை அனுப்பிய நிலையில் அவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து அவர்களை அங்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். உடனடியாக வடவள்ளி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இளம் பெண்ணை மீட்டனர். இதைத்தொடர்ந்து சிவப்பிரகாசத்தை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.