
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிசொலி கிராமத்தில் வசித்து வரும் ஒரு வாலிபருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணம் ஆகி 5 நாட்கள் ஆகும் நிலையில் கடந்த 3ஆம் தேதி தன்னுடைய கணவன் மற்றும் மாமியாருக்கு புதுப்பெண் இரவில் டீ போட்டு கொடுத்துள்ளார். அந்த டீயை குடித்து விட்டு இருவரும் இரவு முழுவதும் தூங்கிய நிலையில் மறுநாள் எழுந்து பார்த்தபோது புது பெண்ணை காணவில்லை. அப்போது வீட்டில் இருந்த நகை பணம் போன்றவைகள் காணாமல் போனது.
அதன்படி 3.15 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் தங்க நகைகள் காணாமல் போனது. மொத்தமாக 5 லட்சத்தை சுருட்டி கொண்டு புது பெண் மாயமாகினார். இதனால் தப்பி ஓடிய புது பெண்ணை தற்போது அவர்கள் வலை வீசி தேடி வருகிறார்கள். இது தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் வழக்கு பதிவு செய்து புதுப்பெண்ணை தேடி வருகிறார்கள்.