தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் நடிகர் விஜய் திமுகவை குடும்ப அரசியல் செய்யும் கட்சி என்றும் திராவிட மாடல் என்று சொல்லி மக்களை ஏமாற்றும் கட்சி என்றும் விமர்சித்த நிலையில் திமுக தான் தங்களுடைய முதல் எதிரி என்றும் அறிவித்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ள நிலையில், பாஜகவை மறைமுகமாக தாக்கி பேசி இருந்தார். இந்நிலையில் நடிகர் விஜய் கலைஞருக்கு சிலை வைக்க வேண்டும் என்று கூறிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது நடிகர் நடிகைகளுக்கு பாராட்டு விழா ஒன்று திமுக அரசு ஆட்சியில் இருக்கும்போது நடைபெற்ற நிலையில் அந்த நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய நடிகர் விஜய் கலைஞர் அவர்களுக்கு ஒரு சிலை வைக்க வேண்டும் என்றார். அதாவது கலைஞருக்கு 100 வயது ஆகும்போது அவருக்கு ஒரு சிலை வைக்க வேண்டும் என்றும் அந்த சிலையை வைக்கும் போது கலைஞர் அருகில் நான் நின்று அதனை ரசித்து பார்க்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். மேலும் இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.