தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர் அஜித்தின் துணிவு மற்றும் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படங்கள் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. துணிவு திரைப்படத்தை எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்திருந்தார். இந்த படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த நிலையில், படத்திற்கு தொடர் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. அதன் பிறகு குடும்ப செண்டிமெண்ட் கதைய அம்சத்தில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தை தில் ராஜு தயாரிக்க, வம்சி இயக்கியுள்ளார். இந்த படத்திற்கும் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி வாரிசு திரைப்படத்தின் டிக்கெட் நேற்று இரவு வரைக்கும் 7.53 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. அதன் பிறகு இன்றும் டிக்கெட்டுகள் விற்பனையாவதால் 10 முதல் 12 கோடி ரூபாய் வரை லாபம் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது பீஸ்ட் படத்தின் முதல் நாள் வசூலை விட குறைவு தான். இதேபோன்று துணிவு திரைப்படத்தின் டிக்கெட் 6.63 கோடி வரை விற்பனையாகியுள்ளது. துணிவு திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் தெலுங்கு மற்றும் தமிழ் இரண்டையும் சேர்த்து அடங்கும். ஆனால் வாரிசு திரைப்படத்திற்கு தமிழ் கலெக்ஷன் மட்டும் தான். மேலும் இரண்டு திரைப்படங்களும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் இன்னும் பல கோடிகளை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.