மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டம் பிம்பல்கானில், தம்பி ஒருவன் தனது மூத்த சகோதரனை இரும்புக் கம்பியால் அடித்து கொன்ற கொடூரமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 35 வயதான பிரமோத் பெண்டோர் என்பவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென அவரது தம்பி கவிஷ்வர் (34) அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்தக் கொலை சம்பவம் அருகிலிருந்த ஒருவரின் மொபைல் கேமராவில் பதிவு செய்யப்பட்டது, தற்போது அந்தக் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by SaamTvNews (@saamtvnews)

இந்த கொலைக்கு குடும்ப தகராறே காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். பிரமோத், 2017-ஆம் ஆண்டு கலப்பு மத திருமணம் செய்து கொண்டதையடுத்து, குடும்பத்திலிருந்து விலகி வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே சகோதரர்களிடையே தகராறு நிலவியதாக தகவல். சம்பவத்தன்று, பிரமோத் தனது பெற்றோரைச் சந்தித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பும்போது, தம்பி ரோட்டிலேயே இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. போலீசார் குற்றவாளியான கவிஷ்வரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.