
கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோடு பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வந்த நிலையில் குடும்ப வறுமை காரணமாக பள்ளிக்கு செல்லாமல் கூலி வேலைக்கு சென்று வந்தார். இவர்கள் குடகு மாவட்டத்தில் உள்ள ஐயங்கேரி கிராமத்தில் வசித்து வந்த நிலையில், காசர்கோடு பகுதியைச் சேர்ந்த ஹம்சா வீட்டு வேலைக்கு ஒரு பெண் தேவை என்று அந்த சிறுமையின் பெற்றோரிடம் கேட்டுள்ளனர். இதனை நம்பிய சிறுமியின் தந்தை அவர்களுடன் தன் மகளை அனுப்பி வைத்த நிலையில் பின்னர் சிறுமியை அவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. கிட்டத்தட்ட 5 வருடங்களாக தன் மகளை பார்க்க முடியாததால் வேலை பார்த்தது போதும் தன் மகளை வீட்டுக்கு அனுப்புமாறு ஹம்சாவிடம் பெற்றோர் கேட்டனர். இந்த சம்பவம் கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்தது.
ஆனால் அவர்கள் சிறுமியை வீட்டிற்கு அனுப்பாததோடு தொடர்ந்து பெற்றோரை மிரட்டினர். பின்னர் பெற்றோர் ஒரு முஸ்லிம் அமைப்பை நாடிய நிலையில் அவர்கள் நடத்திய விசாரணையில் கோவாவில் உள்ள ஹம்சா வீட்டிற்கு சிறுமி அனுப்பப்பட்டது தெரியவந்துள்ளது. பின்னர் காசர்கோடு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பலத்திடுகிடும் தகவல்கள் தெரியவந்தது. அதாவது ஹம்சா மற்றும் அவருடைய மைத்துனர் அப்துல்லா சிறுமியை தொடர்ந்து பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் சிறுமி 2 மாத கர்ப்பிணி ஆக மாறிய நிலையில் அவரை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி கோவாவில் புதிதாக கட்டப்பட்ட வீட்டின் தூண்களுக்கு அடியில் புதைத்தது தெரிய வந்தது.
இவர்களுக்கு ஹம்சாவின் மனைவி மைமுனா உட்பட 3 உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அப்துல்லா, மைமுனா மற்றும் ஹம்சா உட்பட ஐவரை காவல்துறையினர் கைது செய்தனர். இதில் ஹம்சாவுக்கு மரண தண்டனை வழங்கிய நீதிபதி அப்துல்லா மற்றும் மைமுனாவுக்கு 6 வருடங்கள் சிறை தண்டனையும் மற்ற இருவர் அரசு தரப்பு சாட்சியாக மாறியதால் அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டனர். ஆனால் ஹம்சா தனக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அவரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக நீதிமன்றம் குறைத்தது.
இதற்கிடையில் கோவாவில் கட்டப்பட்ட வீட்டை இடித்து கைப்பற்றப்பட்ட சிறுமியின் எலும்பு கூடுகளை ஆய்வகத்தில் வைத்திருந்த நிலையில் தங்கள் மகள் எலும்பு கூடுகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு சிறுமியின் தந்தை கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு கூறியது. அதனை வாங்கிய பெற்றோர் மசூதிக்கு அருகே முஸ்லிம் வழக்கப்படி புதைத்தனர். மேலும் இதனால் 18 வருடங்களுக்கு பிறகு தங்கள் மகள் ஆன்மா சாந்தி அடைந்ததாக கூறுகிறார்கள்.