இந்தியாவில் பெண்களுக்காக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்டம் வழங்கும் பிரதான் மந்திரி மாத்ருத்வா வந்தனா திட்டம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம். இந்த திட்டம் பல்வேறு தவணைகளில் 11 ஆயிரம் நிதியுதவியை கர்ப்பிணிகளுக்கு வழங்குகிறது. நாடு முழுவதும் உள்ள கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும்.

கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் விண்ணப்பித்து கருவுற்றது முதல் குழந்தை பிறந்தது வரை என மூன்று தவறைகளாக பணம் வழங்கப்படும். இலவச மருந்துகள் மற்றும் கர்ப்பத்திற்கு முன் பின்னான பரிசோதனை போன்ற வசதிகளும் இதில் வழங்கப்படும். இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் பெற https://pmmvy.wcd.gov.in என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.

தேவையான ஆவணங்கள்:

கர்ப்பிணி பெண்ணின் ஆதார் அட்டை, குழந்தை பிறப்பு சான்றிதழ், முகவரி சான்றிதழ், வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், பான் கார்டு, வாங்கி கணக்கு புத்தகம், மொபைல் எண், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்.  இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். கர்ப்பிணி வயது 19 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.