
காஞ்சிபுரம் மாவட்டம் வெள்ளை கேட் பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ். இவர் தனது உறவினரான கார்த்திகா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனையும் மீறி நரேஷ் கார்த்திகாவை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தற்போது கர்ப்பமாக இருக்கும் கார்த்திகாவுடன் நரேஷ் உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சிலர் நரேஷை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த நரேஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.