
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஒரு வாலிபர் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன்பாகவே நெருக்கமாக இருந்த நிலையில் அந்த பெண் கர்ப்பமானார். தற்போது அந்தப் பெண் 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள குடும்பத்தினரிடம் கேட்டுள்ளனர். அப்போது வாலிபரின் உறவினர்கள் அந்த பெண் மிகவும் குள்ளமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதன் காரணமாக வாலிபர் அது பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் கர்ப்பமாக இருந்த அந்த காதலி தன்னுடைய உறவினர்கள் மற்றும் காவல் துறையினர் உதவியோடு எப்படியோ அந்த வாலிபரை போராடி திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் இளம்பெண்ணை கர்ப்பம் ஆக்கி திருமணம் செய்து கொள்ளாமல் வாலிபர் மறுப்பு தெரிவித்த நிலையில் காவல்துறையினர் மற்றும் உறவினர்கள் உதவியோடு அந்த பெண் போராடி காதலனை கரம் பிடித்தது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.