
அதிமுக கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ஏற்கனவே அவசர செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்களுடன் சேர்த்து மொத்தம் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 2523 பேரும், சிறப்பு அழைப்பாளர்கள் 1000 பேரும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கூறியதாவது, எங்களுக்குள் எங்கே இருக்கிறது கருத்து வேறுபாடு? எங்கே இருக்கிறது சலசலப்பு? சலசலப்பு வராதா, கருத்து வேறுபாடு வராதா என்று எண்ணி கொண்டிருப்பவர்கள் இங்கே நிரம்பி இருக்கும் எங்கள் தொண்டர்களை பாருங்கள் என கூறியுள்ளார்.