எம்.பி கனிமொழியின் பிறந்தநாளை ஒட்டி தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் ஒட்டப்பட்டு இருக்கும் போஸ்டரில் கனிமொழி அமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருப்பது போலவும், முதல்வர் ஸ்டாலின் அவருக்கு பின்னால் நின்றிருப்பது போலவும் உள்ளது. ஏற்கனவே உதயநிதி, கனிமொழி இடையே அதிகாரப் போட்டி நிலவுவதாக சொல்லப்படும் நிலையில், இந்த போஸ்டர் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாவட்ட துணைச் செயலாளர் கே மோகன் பெயரில் அந்த போஸ்டர் அச்சிடப்பட்டுள்ளது. மகன் உதயநிதியை அமைச்சர் ஆக்கிய பரபரப்பு ஓய்வதற்குள், தங்கைக்கும் பதவி கொடுக்க மறைமுகமாக ஸ்டாலினுக்கு அழுத்தம் தரப்படுவதாக அறிவாலயம் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.