
திருமணம் ஆகாத 20 வயது இளம்பெண் ஒருவர் கர்ப்பமாக இருக்கிறார். இவர் தன்னுடைய 27 வார கருவை கலைக்க உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் கடந்த 3-ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் மனு மீதான விசாரணை வந்தது. அப்போது 24 வாரங்கள் ஆன கருவை மட்டும் தான் கலைக்க முடியும் எனவும் 27 வாரங்களானதால் கருவை கலைக்க அனுமதி கிடையாது எனவும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து அந்தப் பெண் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி வயிற்றில் உள்ள கருவுக்கும் வாழ்வதற்கான அடிப்படை உரிமை உள்ளது இதற்கு நீங்கள் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் என்று கேட்டார். அதோடு 27 வாரங்கள் ஆனதால் கருவை கலைக்க அனுமதி வழங்க முடியாது என கூறி தீர்ப்பு வழங்கினார். மேலும் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இளம் பெண்ணுக்கு 20 வயது ஆவதோடு திருமணமாகாமல் இருப்பதால் வயிற்றில் வளரும் கருவால் சமுதாயத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று வாதிட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.