கம்போடியாவின் தென்கிழக்கு ப்ரேவெங் மாகாணத்தை சேர்ந்த 11 வயது சிறுமி கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி பறவை காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தற்போது அவரது தந்தைக்கும் இந்த காய்ச்சல் பரவியுள்ளது.  49 வயதுடைய அவருக்கு ஹச்5 என்1 வைரஸ் தொற்று இருப்பதை தேசிய பொது சுகாதார நிறுவனம் உறுதி செய்துள்ளது. கம்போடியில் பறவை காய்ச்சல் பாதித்த இரண்டாவது நபர் இவர் ஆவார். பாதிக்கப்பட்ட நபருக்கு அறிகுறிகள் எதுவும் ஏற்படவில்லை.

மேலும் உயிரிழந்த சிறுமியை தொடர்ந்து பாதிக்கப்பட்ட அவரது தந்தை மற்றும் அவரிடம் நெருங்கி தொடர்பில் இருந்த 11 பேரிடம் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த பறவை காய்ச்சல் மனித ஆரோக்கியத்திற்கு அதிலும் குறிப்பாக குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதால் விழிப்புடன் இருக்குமாறு சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.