கோலிவுட் சினிமாவில் தவிர்க்க முடியாத மாபெரும் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் கமல்ஹாசன். இவர் இப்போது ஷங்கர் டைரக்டில் உருவாகும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பாபி சிம்ஹா பிரியா பவானி சங்கர், சித்தார்த் உட்பட பல உச்சநட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அவ்வப்போது நடிகர் கமல்ஹாசன் செய்யும் போட்டோ ஷூட் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அதன்படி ஃபாரின் பெண்களுடன் கொளுத்தும் வெயிலில் கமல்ஹாசனின் ரீசன்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்து இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.