கன்னி ராசி அன்பர்களே,

இன்று ஆடம்பர செலவை குறைத்துக் கொள்வது நல்லது. நண்பர்களிடம் கேட்ட உதவி கிடைக்கும். மன மகிழ்ச்சி ஏற்படும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. வார்த்தைகளை கவனமாக பேச வேண்டும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடை தாமதம் விலகும்.

பண பரிவர்த்தனை முன்னேற்றத்தை காணும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம்.
மேல் அதிகாரிகள் சொன்ன பணியை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு சரியாகும். கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதத்தை குறைத்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது.

இன்று பெண்களுக்கு அக்கம் பக்கத்தில் பேசுவதை குறைத்துக்கொள்ள வேண்டும். குழப்பங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். பனிசுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பில் அக்கறை கொள்ளுங்கள்.
இன்று மாணவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள். முயற்சி செய்தால் கண்டிப்பாக ஜெயிக்க முடியும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 3, 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை நிறம்