கன்னியாகுமரி மாவட்டம் உடையார்விளை பகுதியில் வேதனையூட்டும் விபத்து ஒன்று நடந்துள்ளது. அங்கு உள்ள ஜெப்ரா லைன் வழியே சாலை கடக்க முயன்ற 70 வயதான முதியவர் ஒருவர், அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி கடுமையாக காயமடைந்தார். உடனே அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

“>

 

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து உடையார்விளை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள், ஜெப்ரா லைனில் கூட வாகனங்கள் வேகக்கட்டுப்பாடின்றி ஓடுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.