பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகர் கிரண். இவர் மானாட மயிலாடு என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். அதன் பிறகு சில படங்களிலும் கிரண் நடித்துள்ள நிலையில் இவருக்கு தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நடிகர் கிரணுக்கு மஞ்சுஷா என்பவருடன்‌ திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. மேலும் இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ள நிலையில் கிரணுக்கு பலரும்  வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.