
அசாம் மாநிலத்தில் கடந்த மாதத்திலிருந்து பருவமழை பெய்து வந்துள்ளது. இதனால் பல்வேறு பகுதிகள் வெள்ளைகாடாக காட்சியளிப்பதோடு பிரம்மபுத்ரா மற்றும் பல நதிகளில் நீர்வரத்து அதிகமாகியுள்ளது. இதேபோன்று திகவ், ஜியா-பராலி உள்ளிட்ட பல ஆறுகளிலும் வெள்ள அபாய அளவை கடந்து நீர்வரத்து அதிகமாகியுள்ளது. இதன் காரணமாக அசாமில் வெள்ள பாதிப்பு உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 27 மாவட்டங்களில் சுமார் 14 லட்சத்திக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொடர் மழை வெள்ளத்தால் 2580 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கினர். இதோடு 1,57,000 பேர் இன்னும் 365 நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இதுகுறித்து காசிரங்கா தேசிய பூங்காவின் இயக்குனர் கூறியதாவது, இங்கு இதுவரை 159 வனவிலங்குகள் வெள்ளம் காரணமாக இறந்துள்ளது. இதற்கிடையில் பூங்கா நிர்வாகமும், வனத்துறையும் இணைந்து வெள்ளத்தின் போது 133 விலங்குகளை மீட்டனர். அதில் 111 விலங்குகள் சிகிச்சைக்கு பின் விடுவிக்கப்பட்டன.