தமிழ் திரையுலகின் உச்சநடிகையாக வலம் வருபவர் தான் நயன்தாரா. இவர் லேடி சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் மத்தியில் கொண்டப்பட்டு வருகிறார். ஹீரோக்களுடன் நடிப்பது மட்டுமின்றி women centric திரைப்படங்களிலும் நயன்தாரா நடித்து வருகிறார். இதற்கிடையில் நடிகைகளை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என்று மாளவிகா மோகனன் கூறியது சமூகவலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மாளவிகா மோகனன் “கதாநாயகிகளை லேடி சூப்பர் ஸ்டார் என அழைப்பது எனக்கு பிடிக்காது. கதாநாயகர்களை சூப்பர் ஸ்டார் என்று அழைப்பது போன்று பாலினம் குறிப்பிடாமல் நடிகைகளையும் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கலாம். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோன், அலியாபட் உள்ளிட்டவர்களை யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என அழைப்பதிலேயே என்று அவர் கூறியுள்ளார்.