
2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் குவாலிஃபயர் 1இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் நேற்று மோதிக்கொண்டன. இந்தப் போட்டியில் SRH வீரர் ராகுல் திரிபாதி கண்ணீர் விட்டு அழுதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. SRH வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்த போது ராகுல் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இந்த நிலையில் சுனில் நரைன் வீசிய 14 வது ஓவரில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். இதனை சற்றும் எதிர்கொள்ளாத அவர் படிக்கட்டில் அமர்ந்தபடி கண்கலங்கினார். இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.