கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இந்த நிலையில் விவேகானந்தர் மண்டபத்திற்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை நேற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அடுத்த பேட்டியில் கண்ணாடி பாலத்திற்கு கோரிக்கை வைத்ததே நான் தான்.

அதிமுக ஆட்சியிலேயே இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டது என கூறினார் அதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் எ.வ வேலு கூறியதாவது, கன்னியாகுமரி கண்ணாடி பாலத்திற்கு அதிமுக ஆட்சியில் அரசாணை மட்டுமே போடப்பட்டது. திட்டத்தை மனதில் வைத்துக்கொண்டு படுத்து உறங்கி விட்டு எங்களது திட்டம் என கூறினால் அது சரியல்ல என விமர்சித்துள்ளார்.