மதுரை மாவட்டம் விரதனூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி முருகேஸ்வரி. கடந்த 2019-ஆம் ஆண்டு கணேசன் உயிரிழந்ததால் அவரது பெயரில் இருக்கும் சொத்துக்களை விற்பனை செய்ய வாரிசு சான்றிதழ் கேட்டு முருகேஸ்வரி விராதனூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

அப்போது கிராம நிர்வாக அலுவலர் இந்திரா வாரிசு சான்றிதழ் கொடுக்க 18 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து முருகேஸ்வரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி முருகேஸ்வரி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை இந்திராவிடம் கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் இந்திராவை கையும் களவுமாக பிடித்தனர். இதுகுறித்த புகாரின் பெயரில் வழக்குபதிவு செய்த போலீசார் இந்திராவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.