ஆசிய அளவில் மிகப் பெரிய விநாயகர் கோயில் அமைந்துள்ளது நம் தமிழகத்தில் தான். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றங்கரையில் மணிமூர்த்திஸ்வரம் எனும் இடத்தில் உச்சிஷ்ட கணபதி கோவில் என்ற பெயரில் அந்த ஆலயம் அமைந்துள்ளது. அம்பாளை மடியில் வைத்துக்கொண்டு பக்தருக்கு உச்சிஷ்ட கணபதி தரிசனம் கொடுக்கிறார் . இவரை உச்சிஷ்ட கணபதி என்று கூறினாலும் பக்தர்கள் இவரை மூர்த்தி விநாயகர் என்றே  என்று அழைக்கின்றனர். பிள்ளையாருடன் வீற்றிருப்பது ஸ்ரீ நிலாவாணி அம்பாள் ஆகும் ஸ்ரீ என்பது லட்சுமியையும் நிலா என்பது துர்க்கையையும் வாணி என்பது சரஸ்வதியும் குறிக்க முப்பெரும் தேவியரின் அம்சமாக இந்த அம்பாள் கருதப்படுகிறார்.

இங்குள்ள உச்சிஷ்ட விநாயகரை வழிபடுவதன் மூலம் தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும். குழந்தை இல்லாதவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து உச்சிஷ்ட கணபதியை வணங்கி செல்வதன் மூலம் வீட்டில் மழலைகளின் சத்தத்தை கேட்கும் யோகம் விரைவில் வரும் என்பது ஐதீகம். இந்த ஆலயத்தில் நோய்கள் தீர்ப்பதற்கு கரும்புச்சாறையும் செல்வம் பெருக்குவதற்கு கொழுக்கட்டையும் குழந்தை வரத்திற்கு சர்க்கரைப் பொங்கலையும் நெய்வேத்தியமாக படைப்பார்கள்.