அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு வாலிபர் தன் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றதை பாலில் குளித்து கொண்டாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது. அந்த வகையில் தற்போது விவாகரத்து பெற்று பெண்கள் குழு ஒன்று சுற்றுலா சென்று மகிழ்ச்சியாக கொண்டாடிய வீடியோ தற்போது வைரலாகிறது.

அதாவது கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் ரபியா அபி. இவர் கணவனிடமிருந்து விவாகரத்து பெற்றுள்ள நிலையில் தன்னைப் போன்று கணவனிடமிருந்து விவாகரத்து பெற்ற பெண்களின் குழு ஒன்றை உருவாக்கி அவர்களுக்காக ஒரு சுற்றுலாவை ஏற்பாடு செய்தார்.

இதற்கு மாநிலம் முழுவதும் பல பெண்கள் சம்மதம் தெரிவித்து அந்த சுற்றுலாவில் கலந்து கொண்டனர். அவர்கள் ஆட்டம் பாட்டம் என மகிழ்ச்சியாக இருந்த நிலையில் ஒவ்வொரு பெண்களும் தங்களுக்கு விவாகரத்தானதற்கான காரணங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

மேலும் விவாகரத்து ஆன பெண்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுப்பதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டதாக அவர்கள் கூறியுள்ள நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Rafia (@cook_eat_burn)