புதுக்கோட்டை மாவட்டம் மலையூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவர் மரம் மட்டும் தொழிலாளி. கடந்த மாதம் வேலை முருகேசன் தனது வீட்டிலிருந்து 200 மீட்டர் தூரத்தில் இருக்கும் டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் முருகேசனை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஐயப்பன், முகசீலன் இருவரையும் கைது செய்து விசாரித்ததில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது முருகேசனின் உறவுக்கார பெண்ணை ஐயப்பனின் நண்பர் காதலித்து அழைத்து சென்றுள்ளார்.

ஆனால் முருகேசனின் உறவினர்கள் காதலர்களை பிரித்து விட்டனர். இதனால் நண்பனுக்கு ஆதரவாக ஐயப்பன் சென்ற போது உறவினர்கள் அவரையும் கட்டி வைத்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனால் அவமானத்தில் முருகேசனை வெட்டியதாக ஐயப்பன் கூறியுள்ளார். போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் முருகேசனை ஐயப்பனை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்