சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம் நகர் அரசு குடியிருப்பில் ஆரோக்கியதாஸ்(47) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்தார். கடந்த 4 ஆண்டுகளாக ஆரோக்கியதாஸ் வேலைக்கு செல்லவில்லை. இவரது மனைவி அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் விடுமுறையை முன்னிட்டு உறவினரின் 15 வயது மகள் ஆரோக்கியதாஸின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மனைவி இல்லாத நேரம் ஆரோக்கியதாஸ் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனையடுத்து பெற்றோர் வீட்டிற்கு சென்ற சிறுமிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்து பார்த்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் தங்களது மகளிடம் விசாரித்த போது ஆரோக்கியதாஸ் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி கூறினார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தேவகோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் ஆரோக்கியதாஸை கைது செய்தனர்.