பாமக கட்சியில் எழுந்துள்ள உள் குழப்பம் தற்போது புதிய திருப்பத்தை எடுத்துள்ளது. பாமக  சட்டமன்ற உறுப்பினர் அருள், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அவர் தொடர்ந்து சட்டப்பேரவையில் பாமக கொறடாவாக செயல்பட்டு வருவது சரியானதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, பாமக தலைவர் அன்புமணியின் ஆதரவாளர்களான மூன்று எம்எல்ஏக்கள், அவரை மாற்ற கோரி சட்டப்பேரவை செயலாளரிடம் மனு அளிக்க முடிவு செய்துள்ளனர்.

இதற்காக, பாமக எம்எல்ஏக்கள் சதாசிவம், வெங்கடேஸ்வரன், சிவகுமார் ஆகியோர் பாமாக்காவின் சட்டபூர்வ வழக்கறிஞரோடு  இணைந்து நேரில் சென்று சட்டப்பேரவை செயலாளரை சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பின் போது, அருளை கொறடா  பதவியிலிருந்து நீக்கி, புதிய கொரடாவை நியமிக்க வேண்டிய உத்தரவை கோருகின்றனர்.

கட்சியிலிருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்ட நிலையில், அந்த உறுப்பினர் சட்டப்பேரவையில் கட்சியின் அதிகாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பதவியில் தொடருவது தவறு எனவும், இது கட்சியின் கொள்கைக்கும் மரியாதைக்கும் எதிரான செயலாகும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்த நிலையில், சட்டப்பேரவை செயலாளர் இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.