ஐபிஎல் தொடரில் லக்னோவில் நடைபெற்ற  லீக் ஆட்டத்தில் மும்பை- லக்னோ அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டை இழந்து 23 ரன்கள் எடுத்தது.   தொடர்ந்து 24 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு  களமிறங்கிய மும்பை 20 ஓவரில் ஐந்து விக்கெட்டை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த ஆட்டத்தில் திலக் வர்மா ரன்களை எடுக்க மிகவும் சிரமப்பட்டார். இதன் காரணமாக அவர் 23 பந்தில் 25 ரன் எடுத்திருந்தபோது ரிட்டையர்டு அவுட் ஆகி வெளியேறினார். இந்த முடிவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் மும்பை பயிற்சியாளர் ஜெயவர்தனே பேசுகையில் , “திலக் வர்மா சூர்யகுமாருடன் பாட்னர்ஷிப் அமைத்து நன்றாக விளையாடினார். போட்டியை அவரே முடிக்க வேண்டும் என்று நினைத்தார். அதற்காக இறுதி வரை விளையாட முற்பட்டார். ஆனால் அவர் சிரமத்திற்கு உள்ளானபோது வேறு ஒருவர் புதிதாக விளையாட வேண்டும் என்று எனக்கு தோன்றியது. கிரிக்கெட்டில் இது எப்போதும் நிகழ்வது தான். அவரை வெளியேற்றுவது சரியானது அல்ல. ஆனால் அதை நாங்கள் செய்ய வேண்டி இருந்தது. அப்போது அது சாமயோகிதமாக தோன்றியது” என்று கூறியுள்ளார்.