இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, நாட்டின் தலைநகர் டெல்லியில் பாலம் பகுதியில் 500 மீட்டர் தொலைவுக்கு தெளிவான வானிலை காணப்படுகிறது. அதேபோல் உத்தரகாண்டின் டேராடூன், பீகாரின் பூர்னியா போன்ற பகுதிகளில் 500 மீட்டர் தொலைவுக்கு தெளிவான வானிலை காணப்படும் எனக் கூறியுள்ளது. இதனையடுத்து  வடமேற்கு இந்தியாவில் மேற்கு புறத்திலிருந்து வருகிற 18-ஆம் தேதி முதல் 20-ம் தேதி வரை பலத்த குளிர் காற்று வீச கூடும். இதன் காரணமாக வடமேற்கு இந்திய பகுதிகளில் குளிர் அலை பரவல் காணப்படும். இந்த குளிரலை பரவல் நாளை மறுநாள் உச்சம் தொடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வட இந்தியா முழுவதும் பனிப்படலம் சூழ்ந்தது போல் காணப்படுகிறது. இதனால் வானிலை தெளிவு பெற்று இருக்கிறது. இதனை தொடர்ந்து வடக்கு ரயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 1 முதல் 8 மணி நேரம் வரை பல்வேறு ரயில்கள் கால தாமதமுடன் வந்து சேரும் என கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் கோரக்பூர்- பதிண்டா கோரத்கம் எக்ஸ்பிரஸ் ரயில், டாக்டர் அம்பேத்கர் ஸ்ரீ நகர் மாதா வைஷ்ணவி கத்ரா மால்வா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் போன்றவை ஒரு மணி நேரம் காலதாமதத்துடனும் அதேபோல் ஹவுரா புது டெல்லி பூர்வா எக்ஸ்பிரஸ் ரயில் எட்டு மணி நேரம் காலதாமதமுடனும் வந்து சேரும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து காமக்யா- டெல்லி பிரம்மபுத்திரா மெயில், விசாகப்பட்டினம்- புதுடெல்லி ஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயில் போன்றவை நான்கு மணி நேரமும், எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல்- புதுடெல்லி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் 1.30 மணி நேரம் கால தாமதமாகவும் வந்து சேரும் என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து பயணி ஒருவர் கூறியதாவது, நாங்கள் கடுமையான குளிருடன் போராடி வருகின்றோம். இதற்கு அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் மற்றொரு பயணி கூறியதாவது, ரயில் நிலையத்தில் சுமார் 2 மணி நேரம் காத்திருக்கின்றோம். ரயில் வருவது குறித்த எந்த விதமான தகவலும் இல்லை. ரயில் வருகை குறித்த கால அட்டவணை விவரங்களை யாரும் கூறவில்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.