தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தலைவன்வடலி கிராமத்தில் சித்திரவேல்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று சித்திரவேல் திரவியராஜ்(55) என்பவருடன் பைக்கில் எட்டயபுரம் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் குறுக்கு சாலை அருகே பெட்ரோல் போடுவதற்காக மோட்டார் சைக்கிளை திருப்பியபோது அதிவேகமாக வந்த கார் பைக் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கார் டிரைவரான சையது முகமது என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.