பிரிட்டனில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. மொத்தம் 650 நாடாளுமன்ற தொகுதிகள் கொண்ட பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் தொழிலாளர்கள் கட்சி நேரடியாக போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் வெளிநாடுகளில் இருந்து குடி பெயர்ந்தவர்கள் மற்றும் கருப்பினத்தவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தமிழ் வம்சாவழியைச் சேர்ந்த 8 பேர் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். அதன்படி ஜாகிர் உசேன், கிரிஷ்ணி, நரணி ருத்ரா ராஜன், டெவினா பால், கமலா குகன், மயூரன் செந்தில்நாதன், கவின் ஹரன், உமா குமரன் ஆகிய 8 தமிழர்கள் போட்டியிடுகிறார்கள். மேலும் பிரிட்டன் நாட்டில் லட்சக்கணக்கான தமிழர்கள் வசித்து வரும் நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் தமிழர்கள் போட்டியிடுவது கவனிக்கத்தக்க விஷயமாக மாறி உள்ளது.