கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கர். பாமக கட்சியின் பிரமுகராக உள்ளார். இவர் வன்னியர் சங்க முன்னாள் கடலூர் நகர தலைவராகவும் இருந்துள்ளார்.  இந்த நிலையில் இவர் தன்னுடைய வீட்டினருகே நின்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்மல் அறிவாளால் சராமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடி உள்ளனர்.

உடலில் வெட்டு காயங்களோடு ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் கடலூரில் பதற்றமான சூழல் நிலவு வருகிறது . அவருடைய ஆதரவாளர்கள் மருத்துவமனையில் குவிந்து வருவதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார்? என்பது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.