
ஆஸ்திரேலியாவில் பைரன் விரிகுடா என்ற கடற்கரை அமைந்துள்ளது. இங்கு பலர் பாடிசர்ஃபிங் செய்வார்கள். அந்த வகையில் ரிக் ஷெர்மேன் என்பவரும் பாடிசர்ஃபிங் செய்துள்ளார். அப்போது அவர் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொண்டார். அதாவது கடலில் அலையின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அவரால் கரைக்குத் திரும்ப முடியவில்லை. இதனால் அவர் தண்ணீருக்குள் சிக்கிக் கொண்ட நிலையில், 20 நிமிடங்கள் போராடியும் அவரால் வெளியே வர முடியவில்லை. இதையடுத்து அவரது நண்பரும் ஷெர்மேன் சென்று விட்டார் என்று நினைத்து புறப்பட்டுவிட்டார்.
ஷெர்மேன் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவில் சென்சார்கள் மற்றும் செல்லுலார் இணைப்பு உள்ளது. அந்த ஆப்பிள் வாட்சின் சென்சார் ஒருவர் ஆபத்தில் இருப்பதை உறுதி செய்து, ஆஸ்திரேலியா அவசர சேவைக்கு தொடர்பு கொண்டு கடலில் ஒருவருக்கு உதவிக்கு வேண்டும் என்று எச்சரித்தது. இதைத்தொடர்ந்து மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதன் பின் அவர்கள் சென்சார் உதவியுடன் அவர்கள் ஷெர்மேனை பத்திரமாக மீட்டனர். மேலும் ஆப்பிள் வாட்ச் மூலம் ஒருவர் பத்திரமாக உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.