
ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் கடற்பகுதியில் லைபீரியா நாட்டைச் சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. இந்த கப்பலில் 15 இந்திய மாலுமிகள் இருந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் இந்திய கடற்படையினர் அதிரடியாக கலத்தில் இறங்கி கப்பலில் சிக்கியிருக்கும் நபர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.
இதற்காக இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ் பயன்படுத்தப்பட்டது. முதலில் கொள்ளையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் கப்பலில் இறங்கிய கடற்படையினர் 15 இந்திய மாலுமிகள், 6 பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்களை காப்பாற்றினர்.