
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்திக்கு 54 வயது ஆகிறது. அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில் ராகுல் காந்தி காஷ்மீரில் கல்லூரி மாணவிகளுடன் உரையாடினார். அப்போது அதில் மாணவி ஒருவர் உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேட்டார். இந்த கேள்வியை கேட்டவுடன் சிரித்த ராகுல் காந்தி கடந்த 30 வருடங்களாக இந்த கேள்வியை நான் எதிர்கொள்கிறேன் என்றார்.
அதன்பிறகு திருமணம் பற்றி தற்போதைக்கு எந்தவித திட்டமிடலும் இல்லை. அது நடக்கும்போது தானாக நடக்கும் என்றார். அதோடு இந்த கேள்வி தனக்கு மிகுந்த மன உளைச்சலை தருவதாகவும் கூறினார். கடந்த மே மாதம் ரேபேலி தொகுதியில் ஒரு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தியிடம் பொது மக்களில் ஒருவர் எப்போது திருமணம் என்று கேட்டதற்கு அவர் விரைவில் நடக்கும் என்று பதில் அளித்தார். மேலும் ராகுல் காந்தி திருமணம் குறித்து வேதனையுடன் கூறிய கருத்து தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.