தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அரங்கேறிய குற்ற சம்பவங்கள் குறித்து அதிமுக பதிவிட்டு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று கடுமையாக விமர்சித்துள்ளது. அதாவது ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் சமீபத்தில் நள்ளிரவில் பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதில் குற்றவாளியை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். அதன்பிறகு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வேப்பிலாங்குளம் அருகே ஊராட்சி செயலாளராக இருந்த சங்கர் என்பவர் பட்ட பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரசு ஊழியர் ஒருவரை இருசக்கர வாகனத்தில் செல்லும்போது வழிமறித்து பட்டப்பகலில் கொடூரமாக வெட்டி கொன்றது அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் இதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அரக்கோணம் ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் பெண்களுக்கு இளைஞர்கள் பாலியல் புகார் கொடுத்ததாக அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு காவல்துறை சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டியதற்காக ஏடிஜிபி கல்பனா நாயக் அவர்களை அலுவலகத்தில் வைத்தே தீ வைத்துக் கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது என்ற அதிமுக கூறியுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் இந்த குற்ற சம்பவங்கள் அனைத்தும் நடந்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகிவிட்டது என்று அதிமுக கடுமையாக முதல்வர் ஸ்டாலினை விமர்சித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில்..!
“தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு” pic.twitter.com/KodhRPVLJ9
— AIADMK IT WING – Say No To Drugs & DMK (@AIADMKITWINGOFL) February 3, 2025
