
மத்திய அரசு தற்போது ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது ஓய்வூதியதாரர்களுக்கு மாதத்தின் கடைசி நாளில் ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு மாதமும் மாதத்தின் கடைசி வேலை நாளில் ஓய்வூதியதாரர்களுக்கு பென்ஷன் பணத்தை வழங்க வேண்டும் என்று வங்கிகளுக்கு மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அதாவது ஓய்வூதியம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதால் அவர்களுக்கு நிதி சுமையும் மனசுமையும் ஏற்படுவதால் கடைசி வேலை நாளில் பென்ஷன் பணத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து ஆராய்ந்த மத்திய நிதி அமைச்சகம் மார்ச் மாதம் தவிர்த்து மற்ற மாதங்களில் ஓய்வூதியத்தை விடுவித்து மின்னணு அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.