
இந்தியாவில் வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் டிரைவிங் லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும். இதனால் சமீபத்தில் மத்திய அரசு டிரைவிங் லைசன்ஸ் பெறுவதை எளிமையாக்கி உள்ளது. அதாவது பழைய நடைமுறைப்படி டிரைவிங் லைசன்ஸ் பெற அருகில் உள்ள பிராந்திய அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். அங்கு கற்றல் உரிமை வழங்கப்படும். பின் ஓட்டுனர் தேர்வுக்கு ஆர்டிஐ அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். அங்கு தேர்ச்சி பெற்றால் ஒரிஜினல் டிரைவிங் லைசன்ஸ் வழங்கப்படும். ஆனால் தற்போது அதே நடைமுறை இருந்தாலும், ஆர்டிஐ அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியதில்லை, தேர்ச்சி பெறவும் அவசியமில்லை மற்றும் வரிசையில் நிற்கவும் தேவையில்லை.
ஆனால் இந்த புதிய விதிகளில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் நடத்தும் தேர்ச்சியில் வெற்றி பெற வேண்டும். இந்திய டிரைவிங் லைசன்ஸ்-க்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு செல்ல வேண்டும். இதற்கிடையில் இந்திய டிரைவிங் லைசன்ஸ் வைத்திருப்பவர்கள் மற்ற நாடுகளுக்குச் செல்லாம். இந்திய டிரைவிங் லைசன்ஸ் சில குறிப்பிட்ட நாடுகளில் மட்டும் செல்லுபடி ஆகும். அதன்படி மொரீஷியஸில் 4 வாரங்கள் வரை செல்லுபடி ஆகும். மேலும் ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர்,அமெரிக்காவிலும் போன்ற நாடுகளிலும் சில குறிப்பிட்ட விதிமுறைகளின் கீழ் அனுமதி வழங்கப்படுகிறது.