சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணியில் ஓட்டுநர் இல்லாத ரயில்களை இயக்குவதற்கு முடிவு செய்து அதற்கான வேலைகளில் தற்போது மெட்ரோ நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக முதலில் 138 ஓட்டுநர் இல்லா ரயில்கள் வாங்குவதற்குதிட்டமிடப்பட்டு இருந்த நிலையில் தற்போது 70 ரயில்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு மொத்தமாக 61 ஆயிரத்து 843 கோடி செலவாகும் என திட்டமிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் வருகின்ற 2026 ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்பட்ட மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.