சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் வீடியோ ஒன்று தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பிலாஸ்பூர் பகுதியைச் சேர்ந்த ரோகன் சிங் என்ற சிறுவன், ரயில்வே பாதையின் அருகே நின்றபோது, வேகமாக சென்ற ரயிலில் பயணித்த ஒருவர் காலால் அவரை வலுவாக உதித்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த சிறுவன் கீழே அமர்ந்து வேதனையில் கதறும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் இடம்பெறும் வீடியோவில், சிறுவன் முதலில் விளையாட்டாக நின்று கொண்டிருந்ததுபோல் தெரிகிறது. ஆனால் ரயிலில் உள்ள ஒருவர், கதவுக்கருகே நின்று கொண்டிருந்தபோது, சிறுவனை நோக்கி திடீரென காலால் உதைத்தார். இந்த தாக்குதலால் சிறுவன் எதனால் துன்பப்பட்டான் என்பதைக் கண்டுபிடிக்க முயன்றுவிட்டு, பின்னர் வலியால் குனிந்து அமர்ந்துவிடுகிறார்.

சம்பவத்துக்குப் பிறகு வீடியோ சமூக வலைதளங்களில் தீவிரமாக பகிரப்பட்டு வருகிறது. பலர் இந்தச் செயலை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Làddú Bàbú (@la_ddu2028)

இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், சிறுவன் பாதுகாப்பான இடத்தில் இருந்திருக்க வேண்டிய நேரத்தில் ரயில்வே பாதையில் நின்றது மற்றும் ரயில் பயணியின் அக்கறையற்ற நடவடிக்கை – இரண்டுமே கவலைக்கிடமான விஷயங்களாகும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற செயல்கள் மீண்டும் நடைபெறாதவாறு, ரயில்வே துறை தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.