உத்திரபிரதேசம் மாநிலத்தில் கன்வர் யாத்ரா வழிதடத்தில் பல ஹோட்டல்கள் உள்ளனர். அந்த ஹோட்டல்களில் உணவு விற்பனை செய்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்களின் பெயர்களை காண்பிக்க வேண்டும் என்று முசாபர் நகர் போலீசார் உத்தரவிட்டனர். இந்த உத்தரவு சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி உத்திரவிடப்பட்டது.

இதுகுறித்து அந்த மாநிலத்தின் எதிர்க்கட்சி தலைவர்கள், இந்த உத்தரவு அங்கு கடை வைத்திருக்கும் முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும் என்று தெரிவித்தது. இதைத்தொடர்ந்து இந்த உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்து பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் “ஒவ்வொரு கடையிலும் ஒரே ஒரு பெயர்ப்பலகை இருக்க வேண்டும் அது மனிதநேயம் என்ற பெயர்ப்பலகை” என்று பதிவிட்டுள்ளார்.