நாக்பூரில் உத்க்ரஷ் ஒரு என்ற 21 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவரின் தந்தை ஒரு அனல் மின் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வரும் நிலையில் தாயார் அருணா ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் இன்ஜினியரிங் படித்து வந்த நிலையில் 3 முறை தோல்வியுற்றுள்ளார். இதன் காரணமாக வாலிபரை படிக்குமாறு பெற்றோர் கூறியுள்ளனர். இவருக்கு ஒரு சகோதரி இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரும் படித்து வருகிறார். இந்த வாலிபர் படிப்பில் மிகவும் பின்தங்கி இருந்ததால் பெற்றோர் படிக்குமாறு வற்புறுத்தி வந்தனர். ஆனால் மறுபடியும் அந்த வாலிபர் தேர்வில் தோல்வியடைந்ததால் கோபத்தில் பெற்றோர் ஒன்று ஒழுங்காக படி படிப்பு வரவில்லை எனில் விவசாயம் செய் என்று கூறினார்.

இது வாலிபருக்க அவமானமாக இருந்துள்ளது. கடந்த 26 ஆம் தேதி தன் மகனிடம் அருணா படிப்பு வரவில்லை எனில் கல்லூரிக்கு செல்வதை நிறுத்திவிடு என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் அருணாவை அவர் கழுத்தை நெரித்து  கொலை செய்த பின்னர் சடலத்தை படுக்கையறையில் மறைத்து வைத்து விட்டார். பின்னர் வெளியே சென்றிருந்த அவருடைய தந்தை லீலாதர் வீட்டிற்கு வந்தார். அவரை வாலிபர் கத்தியால் கழுத்தில் குத்திய நிலையில் தந்தை பொறுமையோடு உனக்கு படிப்பு வரவில்லை எனில் விட்டுவிடு தற்போது போய் தாயை அழைத்து வா என்று கூறியுள்ளார். அப்போது வாலிபர் அம்மாவை கொன்றுவிட்டதாக கூறியதோடு தன் தந்தையையும் பலமுறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்தார்.

பின்னர் அந்த வாலிபர் தன்னுடைய தந்தை கைப்பட எழுதியதாக ஒரு ஒரு தற்கொலை கடிதத்தை எழுதி தன் தந்தையின் வால்பேப்பரில் வைத்துள்ளார். பின்னர் கல்லூரிக்கு சென்ற அந்த வாலிபர் தன் தாயும் தந்தையும் தியானத்திற்கு சென்றிருப்பதால் உறவினர் வீட்டில் தங்கும்படி கூறியதாக கூறியுள்ளார். இதற்கிடையில் அவரின் சகோதரி தன் தந்தைக்கு செல்போன் மூலம் பலமுறை தொடர்பு கொண்ட நிலையில் அவர் போனை எடுக்கவில்லை. அப்போது வாலிபர் அவர்கள் தியானம் செய்யும் இடத்தில் செல்போனுக்கு அனுமதி இல்லை என்று தன் சகோதரியிடம் கூறி அமைதிப்படுத்தினார்.

இதைத்தொடர்ந்து ஒரு வாரத்திற்கு பிறகு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து  காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அப்போது அவர்கள் இருவரும் வீட்டில் பிணமாகக் கிடந்தது தெரியவந்த நிலையில் வாலிபர் தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.மேலும் அவரை கைது செய்த காவல்துறையினர் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.