பூந்தமல்லியில் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை மாற்றக் கோரி மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு நடுநிலைப் பள்ளியில் சுமார் 350-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு கணக்கு மற்றும் தமிழ் பாடங்களை எடுத்து வருகிறார். இந்நிலையில் பள்ளிக்கு அடிக்கடி விடுப்பு எடுப்பது கணக்கு பாடங்களை சரியாக சொல்லிக் கொடுக்காதது போன்ற குற்றச்சாட்டுக்கள் தலைமை ஆசிரியர் மீது மாணவர்கள் முன் வைத்துள்ளனர். இதனால் தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி நூற்றுக்கும் அதிகமான பள்ளி மாணவ மாணவிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் பள்ளி பராமரிப்பு குழுவினர் மாணவ மாணவிகளின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.