இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட நிலையில் உலகில் எந்த மூலையில் எந்த சம்பவம் நடந்தாலும் செல்போனில் வீடியோ பதிவு செய்து இணையதளத்தில் பதிவேற்றி விடுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சாலையில் விபத்தில் சிக்கிய மூன்று பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகிறார்கள். அதாவது ஒரு பைக்கில் 3 பேர் ஒன்றாக செல்கிறார்கள்.

அவர்கள் சாலையில் ஒரு கார் மற்றும் லாரி சென்று கொண்டிருந்த நிலையில் அதற்கு இடையில் நுழைய முயற்சி செய்கிறார்கள். அந்த சமயத்தில் முன்னாள் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தவர் திடீரென பிரேக் போட கார் ஓட்டுனர் தன் வேகத்தை குறைத்தார். இதனால் அந்த பைக் காரின் மீது மோதி லாரியின் சக்கரத்திற்கு கீழே விழுந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் மூவரும் காயங்களோடு உயிர் தப்பினர். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் இதுபோன்று  ஆபத்தாக பைக்கில் செல்லக்கூடாது என்று கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.