சென்னை மெட்ரோ ரயில், மாநகரப் பேருந்து, புறநகர் ரயில் ஆகியவற்றில் ஒரே டிக்கெட்டுடன் பயணம் செய்யும் முறை ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் அமல்படுத்தப்படும் என்று முன்னதாக கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை முழுவதும் ஒரே டிக்கெட்டில் மெட்ரோ ரயில், மின்சார ரயில், மாநகரப் பேருந்து ஆகிய மூன்று வகை போக்குவரத்தில் பயணம் செய்யும் வகையிலான புதிய திட்டம் டிசம்பர் மாதத்தில் அமலாக உள்ளது.

இதற்காக பிரத்யேக செயலியை உருவாக்குவதற்கான பணி உத்தரவை அரசு வழங்கியுள்ளது. முதலில் மாநகரப் பேருந்துகளிலும், மெட்ரோ ரயில்களிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. பின்னர், 2025இல் புறநகர் ரயில்களில் செயல்படுத்தப்பட உள்ளது.